Submit your Rss Feed Link Below

Wednesday, May 5, 2010

இந்நேரம்.காம்

உலகின் முதல் முழுமையான முக மாற்று அறுவை சிகிச்சை
விபத்தில் முகம் முழுதும் சிதைந்து போன இளைஞர் ஒருவரின் முகத்தை சீர் செய்து முப்பது பேர் கொண்ட ஸ்பானிய டாக்டர்கள்  குழு ஒன்று சாதனை புரிந்துள்ளது. இதற்குமுன் முக மாற்று அறுவை சிகிச்சைகள் பல நடந்திருந்தாலும் அவை யாவும் பகுதி அளவேயான அறுவை சிகிச்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

புண்ணிய பூமியில் காசேதான் கடவுளடா!

வாழ்நாள் முழுவதும் கஷ்டப் பட்டு அரசுப் பணியில் வேலை செய்தால் கூட சம்பாதிக்க முடியாத தொகையை ஒரே கையெழுத்தில் பெற்று வந்து இருக்கிறார் இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் கேதான் தேசாய். என்ன தலை சுற்றுகிறதா? ஆம். சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க ரூ. 30 கோடி வரை லஞ்சமாக பெற்றுக் கொண்டு அனுமதி தந்து இருக்கிறார் தேசாய்.


வேலை வாய்ப்புகளை உருவாகுவதில் சவூதியும் கத்தாரும் முண்ணணியில்
வளைகுடாவில் வேலை வாய்ப்புகள் : வேலை வாய்ப்புகளை உருவாகுவதில் சவூதியும் கத்தாரும் முண்ணணியில்

- ஓர் ஷ்பெஷல் ரிப்போர்ட்2009 இறுதி காலாண்டில் வளைகுடாவில் உள்ள நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்து, எந்தெந்த நாடுகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன, எந்தெந்த நாடுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று கடந்த மார்ச் மாதத்தில் வளைகுடாவின் பிரபல வேலை வாய்ப்பு நிறுவனம் சர்வே எடுத்தது. அதில் கிடைத்த சுவையான தகவல்கள் இந்நேரம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக தமிழில் அளித்துள்ளோம்.


இருபது வயதில் ஹப்புளுக்கு அடித்தது ஜாக்பாட்
கடந்த சனிக்கிழமை(24-04-2010)யுடன் பிரசித்திபெற்ற ஹப்புல் தொலைநோக்கி (Hubble Space Telescope) விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு இருபது வருடங்கள் நிறைவடைகின்றன. வான்வெளியைப் பற்றி அற்புதமான படங்களுடன் தகவல்களை ஹப்புல் அளித்து வந்தாலும், தற்போது விஞ்ஞானிகள் துள்ளிக் குதிப்பது, அது தற்போது பிறந்தநாள் பரிசு போல் அனுப்பி உள்ள அசத்தும் ஓர் புகைப்படத்திற்காக.

மராட்டிய தலைவர்கள் அனைவரும் கோழைகள் - பால்தாக்கரே!


"டெல்லியிலுள்ள மராட்டியத் தலைவர்கள் அனைவரும் கோழைகள்" என சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே மகாராஷ்டிர மாநில தலைவர்கள் மீது கடுமையாக சாடியுள்ளார்.
பெல்ஜியத்தில் புர்கா தடை : பெல்ஜிய முஸ்லீம்கள் கடும் கண்டனம்

பெல்ஜியத்தில் முஸ்லீம் பெண்கள் தங்களை முழுமையாக மறைத்து கொள்ள  பயன்படுத்தும் நிகாப் அல்லது புர்கா அணிய தடை விதித்து நேற்று பெல்ஜிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு உறுப்பினர்கள் மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மீதமுள்ள உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது தெரிந்ததே.


ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெ.டி.எப்.சி. வங்கிகள் இந்திய வங்கிகள் அல்ல : மத்திய அரசு

புதுதில்லி - இந்தியாவின் பிரபல தனியார்  வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெ.டி.எப்.சி. வங்கிகள் இந்தியர்களுக்கு  சொந்தமான வங்கி அல்ல, வேண்டுமானால் இந்தியர்களால் நிர்வகிக்கப்படும்  வங்கி என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


பாலியல் புகார் கூறப் பட்ட அமைச்சர் ராஜினாமா!

கர்நாடக மாநில உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ஹலப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பாவுக்கு அனுப்பியுள்ளார்.


நியூயார்க் நகரில் காரில் வெடிகுண்டு

நியூயார்க், அமெரிக்கா - நியூயார்க் நகரில் மன்ஹட்டன் (Manhattan) பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற Times Square பகுதியில் ஒரு காரினுள் வெடிகுண்டு வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் உணவு, நீரின்றி 70 வருடங்களாக வாழும் துறவி


ஏழு தசாப்தங்களாக உணவு மற்றும் நீரை உட்கொள்ளாது உயிர் வாழ்வதாகத் தெரிவிக்கப்படும் 83 வயதுத் துறவி தொடர்பாக ஆய்வு நடத்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த இராணுவ வைத்தியர்   குழு முன்வந்துள்ளது.
ஆயுத வியாபாரியுடன் அமைச்சர் தொடர்பு - மாநிலங்களவையில் அமளி!


"வங்கதேச ஆயுத வியாபாரியுடன் தொடர்பு கொண்டுள்ள மத்திய அமைச்சரின் பெயரை வெளியிட வேண்டும்" என எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.
கசாப்புக்கு மே 6ல் தண்டனை

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட அஜ்மல் கசாப்புக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விபரம் மே 6 ஆம் திகதி அறிவிக்கப்படும்


பாகிஸ்தானியரை மணக்கவில்லை மனம் கவர்ந்தவரை மணந்துள்ளேன் - சானியா

பாகிஸ்தானியரைத் திருமணம் செய்யவில்லை, என் மனதைக் கவர்ந்தவரைத் திருமணம் செய்துள்ளேன் என்று டெனிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.பெரும் சர்ச்சைக்குப் பின் கடந்த 12 ஆம் திகதி சொய்ப் மாலிக் சானியா மிர்சா திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் முதல்முறையாக ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை சானியா தனது கணவர் சொய்ப்புடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
வீதிச் சோதனை, பொலிஸ் பதிவு, வீடுகளில் தேடுதல், அவசரகால சட்டத்தின் 38 விதிகள் முற்றாக நீக்கம்

அவசரகால சட்டத்தில் மக்களின் நாளாந்த வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருந்த 38 ஒழுங்கு விதிகள் நேற்றுடன் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
ரியாத் நகரில் பெரு மழை , வெள்ளம் : 2 பேர் பலி ; இலங்கையருக்கு பாதிப்பில்லை

சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இடம்பெற்ற கடும் மழை,வெள்ளப்பெருக்கு ஆகியன காரணமாக இரண்டு பேர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் காயமடைந்தார் என அரப் நியூஸ் ஊடகவியலாளரான எம்.சி.ரசூல்தீன்  சற்று முன் தெரிவித்தார். இச்சம்பவத்தின் போது இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஹஜ் பயண விண்ணப்ப தேதி நீட்டிப்பு!
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் விண்ணப்பங்ளைப் பூர்த்தி செய்து அனுப்ப விதிக்கப்பட்ட கெடு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர் செயலாளர் கா.அலாவுதீன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாட்டுக்கோழி இன அழிப்பு. அரசியல்வாதிகள்தாம் பொறுப்பு!
தமிழகத்தில் நாட்டுக் கோழி இனம் அழிந்துவிட்டதாகவும் இதற்கு அரசியல் கட்சியினரே காரணம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி சட்டமன்றத்தில் கூறினார்.

உண்மை கண்டறியும் சோதனை அரசியல் சட்டத்திற்கு எதிரானது: உச்சநீதிமன்றம்
உண்மை கண்டறியும் சோதனை அரசியல் அமைப்பு சட்டத்திறகு எதிரானது என்று உச்சநீதிமன்ற அமர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நீங்கள் நினையுங்கள்; நான் அதன்படி நடக்கிறேன்
" நான் முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன்"  என்று இனி யாரும் பஞ்ச் டயலாக் விடத் தேவையே இல்லை. "உங்கள் சிந்தனை எனக்கான கட்டளை பாஸ்" என்று நமது எண்ணங்களைப் படித்து செயலாற்றக் காத்திருக்கிறது ஜப்பான் தயாரிக்கப்போகும் ரோபோட்கள்.

17 மாதங்களுக்குப் பின் ஓபராய் மீண்டும் திறப்பு!
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த ஓபராய் ஓட்டல் சனிக் கிழமை (24-04-2010) அன்று மீண்டும் திறக்கப்பட்டது.

கம்யூனிஸ்டுகள் மனைவிகளை மாற்றக் கட்டுப்பாடு!

சீனாவில் "கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தங்கள் மனைவிகளை மாற்றிக் கொண்டால், அவர்களைப் பற்றிய விவரம், அவர்களின் சொத்து, வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகள் பற்றிய விவரம் ஆகியவைகளைக் கட்சி தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும்" என கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


ஈரானுக்கு எதிராக தடைக்கு ஒபாமா தீவிரம்!

ஈரானுக்கு எதிராக ஐநாவின் புதிய பொருளாதார தடைகளை விரைவாக அமல்படுத்த வைப்பதில் அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிரமாக உள்ளதாக அமெரிக்க பொது விவகாரங்களுக்கான அமைச்சர் பி.ஜே.கிரவ்லி தெரிவித்துள்ளார்.


முஸ்லிம்களின் தனித்தன்மையை பாதுகாக்கும் பேரியக்கம்!

 


"நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்திற்கு மாற்றமான மசோதாக்கள் வரும் போதெல்லாம், அதை எதிர்த்து குரல் கொடுத்து முஸ்லிம்களின் தனித் தன்மையை பாதுகாத்து வரக்கூடிய ஒரே இயக்கம், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தான்" என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கூறியுள்ளார்.


ஜார்கண்ட்: ஆதரவு வாபஸ் முடிவு நிறுத்தி வைப்பு - பாஜக
ஜார்கண்ட் மாநிலத்தில் சிபுசோரன் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட முடிவை நிறுத்தி வைத்துள்ளதாக பாஜக கூறியுள்ளது.

மின்வெட்டு- வெள்ளை அறிக்கை என்ன கருப்பு அறிக்கையே அளிக்கத் தயார் : கருணாநிதி!
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து வெள்ளை அறிக்கை என்ன கருப்பு அறிக்கையே அளிக்கத் தயார் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அன்சாரி, சபாஹுதீன் நிரபராதிகள் - நீதிபதி!

கசாப் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குப் போதுமான ஆவணங்கள் உள்ளதாக தெரிவித்த நீதிபதி மும்பை தீவிரவாத தாக்குதில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்ததாக  குற்றம் சாட்டப் பட்ட இந்தியர்களான  அன்சாரி, சபாஹுதீன் ஆகிய இருவரின் பங்கு பற்றி அரசுத் தரப்பில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்று நீதிபதி தஹிளியானி கண்டனம் தெரிவித்தார்.


உலகக் கோப்பை T20 - இலங்கை வெற்றி!

உலகக் கோப்பை T20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய போட்டியில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


பஹ்ரைனில் மதுவுக்கு தடை

பஹ்ரைன் : வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் குறிப்பாக சவூதி அரேபியா, குவைத்தில் உள்ளவர்கள் சுற்றுலாவுக்கு பஹ்ரைனுக்கு செல்வதற்கு ஒரு முக்கிய காரணம் அங்கு மது தாராளமாக கிடைக்கும் என்பதே. இச்சூழலில் மதுவை முற்றிலும் ஒழிக்கும் ஒரு நடவடிக்கையாக முஸ்லீம்கள் மது அருந்த தடை விதிக்கப்பட உள்ளது.


எம்.எல்.ஏ க்களுக்கு வருது ஆப்பு!

ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏ வுக்கும் தனித் தனியாக மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தி தரப் படும் என்றும் தொகுதி மக்கள் தங்கள் தொகுதியில் உள்ள குறைகளை மின்னஞ்சல் மூலம் தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


பிரான்ஸ் போர் கப்பல் சென்னை வருகிறது!
எப்என்எஸ் சோமி என்ற பிரான்ஸ் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் புதன் கிழமை (05-05-2010) அன்று சென்னை வருகிறது. இந்தக் கப்பல் 7ஆம் தேதி வரை சென்னையில் இருக்கும்.

No comments:

Post a Comment